
பொறுத்துப்பார்த்து பொறுத்துப்பார்த்து இனி இது வேலைக்காகாது என திமுக அரசியலை சமாளிக்க அமலாக்கத்துறை திருப்பி அடிக்க தொடங்கியதால் அறிவாலயம் விழி பிதுங்கிவருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்படும் பொழுது தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது என்று கூறி அழுது புரண்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பிறகு மருத்துவர்கள் அவருக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் உள்ளது அதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறும் செய்திகள் தமிழக அரசியலில் மட்டுமல்லாது தமிழக மக்களிடமும் பெரும் அதிர்ச்சியையும்! திமுக மீது சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதெப்படிங்க நன்றாக வாக்கிங் சென்றுகொண்டிருந்த 47 வயதுடைய ஒரு ஆளுக்கு இப்படி உடனே 90 சதவிகித இதய அடைப்பு இருக்கின்றது என மருத்துவர்கள் கூற முடியும் என பொதுமக்கள் சந்தேகத்தையும் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் திமுகவின் வழக்கறிஞர் அணி தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி மீது அமலாக்க துறையினர் மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கவும் மற்றும் அவரை டெல்லி கொண்டு செல்வதற்கும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அதாவது செந்தில் பாலாஜி மனைவியை வைத்து ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தது, செந்தில் பாலாஜி உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவ குழு மூலம் அறிக்கை வெளியிட்டது என தொடர்ச்சியாக முயன்று வருகிறது. இந்த நிலையில் அமலாக்க துறையும் திமுகவின் வழக்கறிஞர் அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக தனது நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது.
அதன்படி அமலாக்கத்துறை தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது அதில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்ததாகவும், கைது செய்யப்படுவதற்கான சம்மன் கடிதத்திலும் அமைச்சர் செந்தில் பாலாஜி கையெழுத்திடாமல் அலைககழித்ததாகவும், மேலும் அவரை வெளியில் விட்டால் குற்றவாளிகளை கலைத்து விட கூடும், ஆதாரங்களை அழிக்க கூடும் எனவும் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அரசு அதிகாரிகளை அரசு பணியில் இருக்கும் பொழுதே மிரட்டுவது என்பது சட்டப்படியான குற்றமாகும், அப்படி இருக்கும் பொழுது அமலாக்கத்துறையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளை செந்தில் பாலாஜி மிரட்டியதை அதிகாரிகளும் ஒப்புக்கொண்டதால் தற்போது செந்தில் பாலாஜி மீது சுமத்தப்பட்ட புகார்கள் மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிகிறது. இந்த நிலையில், தங்களது விசாரணைகளை மேற்கொள்வதற்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுத்து வருகிறார். இதனால் உண்மையை கண்டறிய அமலாக்க பிரிவு காவலில் வைத்து செந்தில் பாலாஜியை விசாரிக்க வேண்டியது அவசியம் என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் தற்போது செந்தில் பாலாஜி மீதான பிடி மேலும் இறுகுகிறது.
மேலும் எப்படியும் செந்தில் பாலாஜியை சிறையில் இருந்து வெளியில் விடக்கூடாது, வேறு எதுவும் நடப்பதற்குள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அமலாக்கத்துறை தங்களது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதால் திமுக தரப்பினர் தங்களது வாழ்நாள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.
அதோடு எப்படியாவது செந்தில் பாலாஜி சந்தித்து தங்களது திட்டங்களை பரிமாறிக் கொள்ளலாம் என்று திமுக மூத்த அமைச்சர்கள் தொடர்ந்து செந்தில் பாலாஜியை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு படையெடுத்து செல்கின்றனர் ஆனால் அவர்களின் முயற்சிகள் ஒவ்வொன்றையும் அமலாக துறையினர் முறியடித்து செந்தில் பாலாஜியை கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் செந்தில்பாலாஜிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளை நிறுத்தி இன்னும் 3 தினங்களில் அறுவைசிகிச்சை செய்ய காவேரி மருத்துவமனை தயாராகிவிட்டது. மேலும் செந்தில்பாலாஜியை அறுவை சிகிச்சை முடிந்தவுடன் அமலாக்கத்துறை அழைத்துச்செல்ல தயாராகிவருவதாகவும் அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பார்கள் பின்னர் அவர்களின் வேகம் குறைந்துவிடும் என்று திமுக தரப்பில் நினைத்த நிலையில் அமலாக்கத்துறை திமுகவின் லீகல் டீமிற்கு இணையாக வேகமாக ஒவ்வொரு நடவடிக்கையையும் முறியடித்து வருவதன் பின்னணியில் அமலாக்கத்துறையின் டெல்லி அதிகாரிகள் பின்னணியில் இருக்கின்றனர் என தெரிகிறது.