24 special

குளிர் காலத்தில் வீட்டில் இருக்க வேண்டிய 5 மூலிகைகள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!


குளிர் காலம் வந்துவிட்டாலே காய்ச்சல், சளி, இருமல் பிரச்சனைகள் வருவது இயல்பானது. இவை தற்காலிகமாக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. அதிர்ஷ்டவசமாக, சளி வைரஸுக்கு சிகிச்சையளிக்க உதவும் பல மூலிகை மருந்துகள் உள்ளன. இந்த மூலிகைகளில் பல பொதுவான அசௌகரியம், தேக்கம் மற்றும் தொண்டை புண்களை ஆற்றவும் பயன்படுத்தப்படலாம். 


சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் பாதுகாக்க குளிர் காலத்தில் பயன்படுத்தக்கூடிய 5 வகையான மூலிகைகள் குறித்து பார்க்கலாம்... 

1. துளசி: இந்துக்கள் புனிதமானதாக போற்றி வளர்க்கும் துளசி, குளிர்  காலத்தில் வீட்டில் பயன்படுத்தக்கூடிய பல வைத்தியங்களுக்குப் பயன்படுகிறது. ஆயுர்வேத மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவ இதழில் வெளிவந்த 2014 ஆய்வின்படி, துளசியில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை காளான் மற்றும் அழற்சி எதிர்ப்பு செயல்பாடுகள் உள்ளன. இந்த குளிர்காலத்தில் உங்கள் வீட்டு வாசலில் தோன்றக்கூடிய அனைத்து நோய்களுக்கும் துளசி சிறந்த தீர்வாகும்.

2. நறுவல்லி: கோர்டியா மைக்சா என்ற நறுவல்லி ஆயுர்வேத மூலிகைகளில் பிரபலமானது. யுனானி மருத்துவத்தின் ஒரு முக்கிய அங்கமான சபிஸ்தான், ஜலதோஷம் மற்றும் இருமல் உள்ளிட்ட மேல் சுவாசக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. கூடுதலாக, ஐஓஎஸ்ஆர் ஜர்னல் ஆஃப் பார்மசியின் ஜூன் 2016 இதழின் அறிக்கை, இந்த மூலிகையில் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி குணாதிசயங்களும் உள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளது, இது குளிர்காலத்தில் சிறந்த துணையாக அமைகிறது.

3. சரக்கொன்றை: காசியா ஃபிஸ்துலா என்றும்,  "கோல்டன் ஷவர் ட்ரீ" என்றும் அழைக்கப்படும் சரக்கொன்றை மலர் பல வீடுகளில் அலங்காரத்திற்காக வளர்க்கப்படுகிறது. இந்த தாவரங்களின் விதைகள் மற்றும் பூக்கள் நமர்து ஆரோக்கியத்திற்கு நம்பமுடியாத அளவிற்கு நன்மை பயக்குகிறது. கூடுதலாக, சரக்கொன்றை மலரின் சாறுகள் காய்ச்சலைக் குறைக்கவும், தொண்டைக் கோளாறுகளைத் தணிக்கவும், வீக்கம் மற்றும் மார்பு எரிச்சலைக் குறைக்க உதவுவதாகவும் இந்தியாவின் தேசிய சுகாதார இணையதளம் கூறுகிறது. 

4. இலந்தை பழம்: ஜூஜுப் பழம் என அழைக்கப்படும் இலந்தை பழத்தின் காய வைக்கப்பட்ட வடிவமான உன்னப், யுனானி மருத்துவத்தில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பழம் இருமலைப் போக்கவும், சுவாச மண்டலத்தை அமைதிப்படுத்தவும் உதவுகிறது. இந்த பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது, இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். 

5. அதிமதுரம்: தொண்டை வலி, வறட்டு இருமல், நெஞ்சு சளி ஆகியவற்றை போக்க அதிமதுரம் பெரிதும் பயன்படுகிறது. இவற்றில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் பண்புகள், ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்களால் பருவ காலங்களில் ஏற்படும் சளி, தொண்டை வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். 2015 ஆம் ஆண்டு ஆய்வின்படி, சக மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழான Acta Pharmaceutica Sinica B (APSB) இல் . உடலில் தொற்று நோய்கள் பரவுவதைத் தடுக்கும் ஆற்றல் அதிமதுரத்திற்கு உண்டு எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.