24 special

முதல்வரின் பேச்சால் ..! அப்செட்டான செந்தில் பாலாஜி

Senthil balaji, mk stalin
Senthil balaji, mk stalin

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கோவை, கரூர் வீடு உள்ளிட்ட இடங்களிலும், அவருக்குத் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனைகளை துவங்கினர். செந்தில் பாலாஜி அதிமுக அரசில் அமைச்சராக இருந்தபோது வேலைவாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டு, அது தொடர்பான விசாரணைகள், ஹைகோர்ட், சுப்ரீம்கோர்ட்டில் நடைபெற்று வந்தன.. சில நாட்களுக்கு முன்புதான், சுப்ரீம்கோர்ட் பிறப்பித்த உத்தரவில் மறுபடியும் இந்த புகார் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது.


சென்னையில் செந்தில் பாலாஜியிக்கு நெருக்கமான 200க்கும் உட்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்த திமுகவும் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக ஜப்பான் பயணம் சென்ற நிலையில் இந்த ரெய்டு விவகாரத்தால் மிகவும் டென்ஷன் ஆகியுள்ளார். மேலும் இந்த ரெய்டு தொடர்பாக அடிக்கடி தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என விவரங்களை தன்னுடன் வரும் அதிகாரிகளை கேட்டு தெரிந்துகொண்டு வருகிறாராம். 

தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, நெருங்கிய நண்பர்கள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர் அலுவலகம், வீடுகள் என 200 இடங்களில்   வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை இன்னும் முடிவடையாத நிலையில் இந்த ரெய்டு அடுத்த பல மணி நேரங்கள் தொடரும் எனவும் தெரிகிறது.

விடிகாலையிலேயே இந்த சோதனை துவங்கியது மேலும் விடியற்காலை செந்தில் பாலாஜி வீட்டில் பெல் அடித்து பார்த்து பின்னர் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காத காரணத்தினால் அதிகாரிகள் கதவை ஏறி குதித்து செந்தில்பாலாஜியின் வீட்டில் நுழைந்துள்ளனர். இந்த ரெய்டு நடவடிக்கையை  கொஞ்சம் கூட எதிர்பார்க்காத செந்தில்பாலாஜி உடனே தனது சகோதரர் மற்றும் ஆதரவாளர்களை கண்டபடி திட்டியுள்ளார். உங்களை நம்பித்தான் விட்டேன் எதுவும் நடக்கக்கூடாது என செம்ம திட்டு திட்டினாராம். அதன் பிறகுதான் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியுள்ளார்.

அதுமட்டுமல்ல, மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக அரசு அரசியல் ரீதியாக பழி வாங்கும் நடவடிக்கையாக இது போன்ற ரெய்டுகளை நடத்துவதாக, திமுக தரப்பில் குற்றச்சாட்டுகள் கிளப்பி விடவேண்டும் என திமுக மேலிடத்தில் இருந்து திமுகவினருக்கு உத்தரவு பறந்துள்ளதாம்.

இந்நிலையில்  செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள்  தாக்குதல் நடத்த முற்பட்ட விவகாரமும், வருமானத்துறை அதிகாரிகள் திமுகவினர் மீது  புகார் கொடுத்ததும் பரபரப்பாகியது.இந்நிலையில்தான் வெளிநாட்டில் உள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு, வருமானவரித்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அறிந்த முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலாளரிடமும், டிஜிபியிடமும் உடனடியாக ஆலோசித்துள்ளார். ஏற்கனவே பல அவப்பெயர்கள் இருக்கும் நிலையில் இந்த ரெய்டு விவகாரம் அதனை தொடர்ந்து செந்தில்பாலாஜியின் ஆட்கள் அதிகாரிகளை தாக்கிய விவகாரம் போன்றவை முதல்வர் ஸ்டாலினை கோபப்படுத்தியதாக தெரிகிறது.

அதுமட்டுமல்ல, வருமானவரித்துறையினர் கோரிக்கை வைத்தாலும் வைக்காவிட்டாலும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்குக்கு எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது என்றும் முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பாக கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக  செந்தில் பாலாஜி ஆட்கள் அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்துகொண்ட மையமாக வைத்து முதல்வர் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு செம டோஸ் கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஒரு பக்கம் ஐ டி ரைடும், மற்றொரு பக்கம்  முதல்வரின் டோஸ்  என  மாறி மாறி  தன்னை வாட்டுவதாக  செந்தில் பாலாஜி  அப்செட்டாக இருக்கிறாராம்.