
சர்ஜிகல் ஸ்டிரைக் என்பது நமது நாடு மீது கோழைத்தனமாக புறவாசலில் ஊடுருவி, காட்டுமிராண்டித்தனமாக கொடூர கொலைகளை அரங்கேற்றும் ரத்தவெறி ஓநாய்களுக்கு சரியான பாடம் கற்பிப்பதும் அவர்களை இல்லாது அழித்தொழிப்பதும்தான். நமது நாட்டின் ராணுவ நடவடிக்கைகளில் ஒரு அங்கமாகவே சர்ஜிகல் ஸ்டிரைக் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.
ஏற்கனவே 2015-ம் ஆண்டு மணிப்பூரில் ராணுவத்தினரை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி படுகொலை செய்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் மியான்மர் நாட்டுக்குள் நுழைந்து இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் மியான்மரில் பதுங்கி இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் முகாம்கள் அழித்தொழிக்கப்பட்டன. இந்த சர்ஜிகல் ஸ்டிரைக்கில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில் மியான்மர் எல்லையில் உள்ள உல்ஃபா(I) முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. .இதுகுறித்து தீவிரவாத அமைப்பான உல்ஃபா(I) அமைப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், பல நடமாடும் முகாம்களில் அதிகாலையில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தடைசெய்யப்பட்ட அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் தாக்குதல்களில் கொல்லப்பட்டார்.மேலும் சுமார் 19 பேர் காயமடைந்தனர். என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானுக்குள் செய்ததை போல அசாம் பர்மா எல்லையிலும் பர்மாவுக்குள்ளும் இந்தியா பெரிய தாக்குதலை நடத்தியிருக்கின்றது என்ற செய்தி தீயாக பரவி வருகிறது. இங்கு இந்திய ராணுவம் நேரடியாக களமிறங்கவில்லை போர் விமானங்களும் இறக்கபடவில்லை மாறாக ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களும் அவற்றில் இருந்து இயக்கபடும் ஏவுகனைகளும் விளையாடியிருக்கின்றன
ட்ரோன்களை வெடிகுண்டு நிரப்பி ஏவிவிடுவது வேறு, ட்ரோன்களில் ஏவுகனை பொருத்தி துல்லியமாக தாக்குவது வேறு இரண்டாம் வகை மிக நவீனமானது எல்லோருக்கும் சாத்தியமில்லைகாஷ்மீர் தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் போல நக்சல்கள், மாவோயிஸ்டுகள், மணிப்பூர் கோஷ்டிகளுக்கு இந்த பர்மாதான் தாய்வீடு, அங்கு குறிவைத்து அடித்திருக்கின்றது இந்தியா. பார்மா எல்லை ஆனால் இவை சீனாவின் பாதுகாப்பில் உள்ளது. சீனாவை மீறி இந்தியா அடித்த அடி என்பதால் முழு தகவலும் இந்திய ராணுவம் சொல்லாமல் வெளிவராது ,மிக நவீனமான தாக்குதலை இந்தியா பர்மாவில் செய்ததை அடுத்து பாகிஸ்தானின் தீவிரவாதிகள் குழிக்குள் சென்று கதவுகளை மூடிகொண்டனர் என்பது கூடுதல் செய்தி அதுமட்டுமில்லாமல் வம்புக்கு நிற்கும் வங்கதேசமும் அனைத்து துயரங்களையும் மூடி கொண்டு உள்ளது.
இதற்கிடையே சீனாவின் தியான்ஜின் நகரில்ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சில் கூட்டம் நடக்க இருக்கிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் பெலாரஸ் ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.இந்த நிலையில் தற்போது நடைபெற இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சில் கூட்டத்தில் 10 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.அந்த வகையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்தியா சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று மூன்று நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் சீனா சென்றுள்ளார். சீனாவில் ஜெய்சங்கர் இருக்கும் வேளையில் சீனாவின் ஆதரவில் இருக்கும் தீவிரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடித்தியிருப்பப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.