24 special

அடேங்கப்பா... ஒருத்தர கூட விடாம பாராட்டிய அண்ணாமலை! என்ன மேட்டர் தெரியுமா மக்களே...!

Annamalai
Annamalai

விளையாட்டு துறையில் தொடர்ந்து ஆர்வம் காண்பிக்கும் பாஜக, இன்றைய திறமையான இளைஞர்களை உலகுக்கு அடையாளம் காட்டிகிறது. அந்த வகையில் சமீபத்தில் குடியரசு தலைவர் கரங்களினால் விருது பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்து, மத்திய அரசு விளையாட்டு துறைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்பது குறித்தும் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் தமிழக பஞ்சாங்க தலைவர் அண்ணாமலை.


அதன் படி, விளையாட்டு உலகில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் மத்திய அரசின் மகத்தான விருதுகள் விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இளைய சமுதாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில், நம் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து, விளையாட்டுத்துறையை மேம்படுத்தியுள்ளது. நம் வீரர்கள் வென்று குவிக்கும் பதக்கப் பட்டியல்களே, மத்திய அரசின் நன்முயற்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ்களாகும்.

இன்று நம் குடியரசுத்தலைவரின் திருக்கரத்தால், விழிப்புணர்வை ஏற்படுத்தும்,  இந்த ஆண்டிற்கான விளையாட்டுத்துறையின் விருதுகளைப் பெற்ற வீரர் வீராங்கனைகள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். 

குறிப்பாக, மேஜர் தயான்சந்த், கேல்ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சென்னையை சேர்ந்த சரத் கமல் அவர்களுக்கும் 

அர்ஜூனா விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா, தமிழகத்தின் கடலூரை பூர்வீகமாக கொண்ட துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனில், மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா உள்ளிட்ட அனைவருக்கும் தமிழக பாஜக சார்பில் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்

விளையாட்டு வீரர்களுக்கும், அவர்களின் வெற்றிகளுக்கும், வெற்றிக்கான முயற்சிகளுக்கும், பாரதிய ஜனதா கட்சி என்றும் துணைநிற்கும். தகுதியையும், திறமைகளையும் கண்டறிந்து, விருதுகளால் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் நம் பாரதப்பிரதமர் மாண்புமிகு.திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நல்வாழ்த்துக்கள் என்றும் தேசப் பணியில். (K.அண்ணாமலை) இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.