24 special

ஊடகங்கள் எதிர்பாரத சம்பவம் அரங்கேறியது...!

Modi
Modi

தமிழக ஊடகங்கள் முதல் ஆங்கில ஊடகங்கள் வரை பிரதமர் மோடியின் தாயார் மறைவு அதையொட்டி நடந்த சம்பவங்களை பார்த்து வாயடைத்து போயிருக்கின்றன.


பிரதமர் மோடியின் தாயார் உடல்நல குறைவால் காலமானார் என்ற செய்தி வெளியான உடன் பல ஊடகங்கள் பிரதமர் மோடியின் இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து, மாநில முதல்வர்கள் அமைச்சர்கள் தொடங்கி, முக்கிய பிரமுகர்கள், மத்திய மந்திரிகள் என பலரும் குஜராத் சென்று பிரதமரிடம் துக்கம் விசாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியிட்ட வண்ணம் இருந்தன.

இதற்காக தனி நிகழ்ச்சிக்கு ஊடகங்கள் ஏற்பாடு செய்தன, ஆனால் பிரதமர் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் விரைவாக மோடியின் தாயார் ஹீராப்பெண் உடலை விரைவாக தகனம் செய்தனர், மயானம் வரை மோடியே தாயின் உடலை சுமந்து சென்றார், சாதாரண சினிமா நடிகர்கள் மறைவை கூட ஊடகங்கள் நாள் முழுவதும் செய்தியாக வெளியிட்ட கால கட்டத்தில் பிரதமர் அவரது தாயார் உடலை 50 க்கும் குறைவான உறவினர்களை கொண்டு எளிமையாக நல்லடக்கம் செய்தது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பிரதமர் மோடியின் குடும்பத்தினரோ தாங்கள் அனைவரும் தங்கள் பணியை செய்வதே எங்கள் ஹீராபெண் தாய்க்கு செலுத்தும் மரியாதை என கூறி எளிமையாக முடித்து கொண்டனர் இது ஒருபுறம் என்றால் பிரதமர் மோடி ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி மேற்குவங்க அரசு நிகழ்ச்சியில் காணொளி மூலமாக கலந்து கொண்டு தனக்காக காத்திருந்த பொதுமக்களுக்கு சேவையை தொடங்கி வைத்தார்.

காலையில் தனது தாயின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அடுத்த சில மணி நேரங்களில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உண்மையில் உலகத்தின் தண்ணிகரில்லா தலைவர் என்பதை பிரதமர் மோடி நிரூபித்துள்ளார். பல அரசியல் தலைவர்களின் குடும்பத்தினர் மரணம் பல்வேறு நேரங்களில் அரசியலாக்க பட்ட நிலையில் தனது தாயின் மறைவை அரசியலுக்கு உட்படுத்தாமல் அதே நேரத்தில் ஒப்புக்கொண்ட பணியையும் செய்து ஊடகங்களின் கணிப்பிற்கு முற்று புள்ளி வைத்து இருக்கிறார் பிரதமர் மோடி என்கின்றன குஜராத் வட்டாரங்கள்.