
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பாஜகவின் புதிய தலைமை அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று திறந்து வைத்தார். பின்னர், பாஜக நிர்வாகிகள், வார்டு தலைவர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியினரால் பாஜக தொண்டர்கள் கொல்லப்படுகின்றனர். நாம் நூற்றுக்கணக்கான தியாகிகளை இழந்துவிட்டோம். நமது கட்சியை ஆட்சியில் அமர்த்துவதுதான் நமது நோக்கம். வரும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக 21,000 வார்டுகளில் போட்டியிடும். 25 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று, பெரும்பாலான வார்டுகளில் பாஜக வெற்றி பெறும்.
பாஜகவை வடநாட்டு கட்சி என காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். திரிபுராவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை அகற்றி நாம் ஆட்சி அமைத்துள்ளோம். மக்களவை தேர்தலில் தெலங்கானாவில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளோம். அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களிலும் நாம் மாபெரும் வெற்றியை பெறுவோம். அந்த வகையில், மேற்கு வங்கம், கேரளா, தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும். என்றார் மேலும்
திமுக ஆட்சியில் கட்டுப்படுத்த முடியாத பரவலான ஊழல். ஆயிரக்கணக்கான கோடிகள் ஊழல் அடங்கிய நீண்ட பட்டியலே இருக்கிறது.
ரூ. 39,775 கோடிக்கு மதுபான ஊழல் நடந்துள்ளது. மதுபான விற்பனை உரிமங்களில் முறைகேடுகள், மதுக்கடை டெண்டர்கள், மதுவுக்கு அதிக கட்டணம் வசூலித்தல், சட்டவிரோத விற்பனை, மது பாட்டில் கொள்முதல் மோசடி ஆகியவை இதில் அடங்கும்.
ரூ. 5,800 கோடி மணல் சுரங்க ஊழல்: 4.9 ஹெக்டேர் மட்டுமே சுரங்கம் வெட்ட அனுமதிக்கப்பட்ட நிலையில் 105 ஹெக்டேர் வெட்டப்பட்டது. இது 30 மடங்கு அதிகம்.எரிசக்தி ஊழலில் திமுக வழங்கிய ஒப்பந்தங்கள் மூலம் ரூ. 4,400 கோடி முறைகேடு நடந்துள்ளது.பொது நிறுவன பங்குகள் தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது உள்பட எல்காட் நிறுவனத்தில் ரூ. 3,000 கோடி ஊழல்.
போக்குவரத்துத் துறையில் போலி வாகன சான்றிதழ் வழங்கியதில் ரூ. 2,000 கோடி ஊழல்.தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தில் போலி லெட்டர்ஹெட், நிறுவனங்கள், முகவரிகள் மூலம் வழங்கப்பட்ட ஒப்பந்தங்களில் ரூ.600 கோடி ஊழல்.ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக, பெண்களுக்கான ஊட்டச்சத்துப் பெட்டகம் அதன் உண்மை விலையைவிட 4–5 மடங்கு அதிக விலைக்கு வாங்கி ரூ. 450 கோடி ஊழல் நடந்துள்ளது.
பொங்கல் பண்டிகையின்போது இலவச வேஷ்டி - சேலை வழங்குவதில் ரூ.60 கோடி முறைகேடு.வேலை வாங்கித் தருவதாகக் கூறி தனிநபர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்து பண மோசடி நடந்துள்ளது.மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒரு பயனாளிக்கு ரூ. 41,503 முறைகேடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்து திமுகவில் குழுவாக செயல்படுகிறார்கள். மாநில தலைமைச் செயலகத்திற்கு வெளியே அதிகார மையம் இருக்கிறது. ஸ்டாலினின் மருமகன் சபரீசனைப் பின்பற்றுவதா அல்லது மகன் உதயநிதியைப் பின்பற்றுவதா அல்லது கனிமொழி அல்லது வேறு யாரையாவது பின்பற்றுவதா என திமுக தொண்டர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். அதனால்தான் திமுக ஒன்றுமில்லாத பிரச்னைகளை உருவாக்க முயற்சிக்கிறது.என் ஊழல் லிஸ்டை உள்துறை அமைச்சர் அடுக்கியதால் அறிவாலய தரப்பு அதிர்ச்சியில் உறைந்துள்ளது, எப்படியும் அடுத்த முறை திமுக வரவே வாராது என சர்வே ரிப்போட்டும் கொடுத்துள்ளதால் தற்போத தங்களை காப்பற்றி கொள்ளலாம் என பல இந்நாள் முன்னாள் அமைச்சர்கள் டெல்லியுடன் கைகோர்க்க தொடங்கி உள்ளார்களம். மேலும் அமித் ஷாவிடம் அப்பாயிமென்ட் வாங்கி தரவும் கேட்டு வருகிறார்களாம்.