24 special

மீண்டும் சிக்கி வறுபடும் நடிகர் சூர்யா குடும்பம்..!

Suriya and family
Suriya and family

மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது நடிகர் சிவகுமார் குடும்பம், இந்த முறை சர்ச்சையை உண்டாக்கி இருப்பது சிவகுமாரின் மூத்த மகன் சூர்யா மற்றும் அவரது மனைவிதான்.


நடிகர் சிவகுமார் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருக்குறள், கம்பராமாயணம், பாரதியார் கவிதைகள் குறித்து பேசினார் அப்போது கண் கலங்கி விளக்கமும் கொடுத்தார், இந்த வீடியோவை பார்த்த பலர் இப்போது பேசி என்ன பயன் அதான் சூர்யா மும்பை பறந்து விட்டாரே என கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி இருக்கின்றனர்.

குறிப்பாக நடிகர் சூர்யா புதிய கல்வி கொள்கை குறித்து பேசிய வீடியோவை ஒப்பிட்டு பெரும் விவாதத்தை உண்டாக்கி இருக்கிறார்கள், வலதுசாரிய ஆதரவாளர்கள். அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிவகுமார் எனது இரு மகன்களையும் சூர்யாவை கல்விக்கும், கார்த்தியை விவசாயத்திற்கும் தத்து கொடுத்து இருக்கிறேன் என பேசினார்.

அதே நிகழ்ச்சியில் பேசிய சூர்யா மத்திய பாஜக அரசு கொண்டுவந்த புதிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சனம் செய்தார் 5 வயது குழந்தை எத்தனை மொழிகளை படிக்கும், புதிய கல்வி கொள்கை தேவையில்லை என்றெல்லாம் ஆவேசமாக பேசினார் சூர்யா.

இப்படி பேசிய சூர்யா பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 70 கோடிக்கு சொகுசு வீடு வாங்கி தனி குடித்தனம் போயிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது, ஏன் என்ற காரணம் கேட்க தங்கள் குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட எதிர்காலத்தை கணக்கிட்டு சூர்யா மும்பையில் குடியேறி இருப்பதாக கூறப்படுகிறது.

இதைத்தான் சாமனிய மக்கள் கேள்வி எழுப்புகின்றனர், திரைப்படங்களில் தமிழ் தமிழ்நாடு என வீரவசனம் பேசிய சூர்யாவிற்கு தமிழ்நாட்டில் ஒரு நல்ல பள்ளிக்கூடம் கூட தனது பிள்ளைகளை படிக்கவைக்க கிடைக்கவில்லையா? அந்த அளவிற்கு தமிழகத்தில் பள்ளிகளின் தரம் குறைந்து இருக்கிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சாமானிய வீட்டு குழந்தை கூட உயர்ந்த கல்வியை படிக்க வேண்டும் என மோடி நினைத்து புதிய கல்வி கொள்கையை கொண்டுவந்தார், அதை எதிர்த்த சூர்யா இப்போது அதே பாஜக ஆளும் மாநிலத்தில் சென்று தனது பிள்ளைகளை படிக்க வைக்க இருப்பதாக வரும் செய்திகள் உண்மையில் சூர்யாவின் இரட்டை முகத்தை காட்டுவதாக பொறிந்து தள்ளுகின்றனர் சாமானிய மக்கள்.

சாதாரண குழந்தைகள் வீட்டு பிள்ளைகள் தரமான கல்வி படிக்க கூடாது உங்கள் வீட்டு குழந்தைகள் படிக்க வேண்டும் என்றால் மாநிலம் விட்டு மாநிலம் புதிய கல்வி பயில உங்கள் குழந்தைகளை அழைத்து செல்வீர்களா என கடும் விமர்சனம் எழுந்து இருக்கிறது

இது ஒருபுறம் என்றால் நடிகர் கார்த்தி திமுக அரசு கொண்டுவந்த வேளாண் பட்ஜெட்டை வரவேற்று முதல்வருக்கு நன்றி சொல்லி இருந்தார், இந்த சூழலில் தான் கார்த்தியும் தற்போது விமர்சனத்தை சந்தித்து இருக்கிறார் கடந்த முறை பாஜக கொண்டுவந்த சுற்று சூழல் குறித்த வரைவு அறிக்கையை கடுமையாக விமர்சனம் செய்த கார்த்தி திமுக ஆட்சியில் பறந்தூர் விமான நிலையம் அமைக்க நிலம் கையக படுத்துவது குறித்து வாய் திறக்காதது ஏன்.

பாஜக அரசு என்றால் எதிர்பீர்கள் திமுக அரசு என்றால் வாயை மூடி வேடிக்கை பார்பீர்களா? விவசாயிகள் தங்கள் நிலம் பறந்தூர் விமான நிலையம் மூலம் அரசு அபகரிக்க பார்ப்பதாக குற்றம் சுமத்தும் வேலையில் அது பற்றி வாய் திறக்கவில்லை ஆனால் திமுக அரசு கொண்டுவந்த விவசாய பட்ஜெட்டை வாழ்த்தி அறிக்கை விடுகிறார் என கொந்தாளித்து வருகின்றனர் தமிழக மக்கள்.

சிவகுமார் நீங்கள் இராமாயணம், திருக்குறள் என பக்கம் பக்கமாக விளக்கம் கொடுத்து கண்ணீர் சிந்தி அழுது என்ன பயன் உங்கள் பிள்ளைகள் பேச்சு ஒரு மாதிரியும் செயல் வேறு மாதிரியும் இருக்கிறதே என கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

எது எப்படியோ மும்பை புதிய வீடு, திமுகவின் விவசாயம் பட்ஜெட்டை வரவேற்பது என புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறது நடிகர் சூர்யா குடும்பம்.