24 special

முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உதயநிதி மற்றும் திருமாவளவனை மையமாகக் கொண்ட குறும்படம் சோசியல் மீடியாவில் வைரல்.


தமிழகத்தில் திராவிட கட்சிகள் பொது மேடைகளில், கடவுள் மறுப்பு கொள்கையும், பல சமயம் இந்து மத கடவுள்களை இழிவாக பேசுவதும் அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்புவதும் நம் எல்லோரும் அறிந்ததே. 


குறிப்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தேவர் ஜெயந்தியில் கொடுத்த விபூதியை தட்டி செல்வது, கோவிலில் பிரசாதமாக கொடுத்த குங்குமத்தை அழித்தது மற்றும் கல்யாணத்தில், கோவில்களில் நடக்கும் யாகம்,  ஓம குண்டத்தில் எழும்பும் புகைகள் கண் எரிச்சலை தரும் என்று பேசியதும், ஆ ராசா கனிமொழி, திருமாவளவன் போன்றவர்கள் பல சமயம் இந்து மத கடவுள்களை, இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசுவதும், உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, களிமண்ணில் பிடிக்கும் பிள்ளையார் என்றெல்லாம் கூறியதும் ,  கருப்பர் கூட்டம் என்ற பெயரில் தமிழ் கடவுளான முருகனையும் , இந்து மத கடவுள்களையும் இழிவுபடுத்தும் விதமாக பேசுவதும் இன்று வரை சோசியல் மீடியாக்களில் வைரலாகி வரும் சூழ்நிலையில் 

தற்பொழுது இதற்கு எதிர்ப்பாக தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவரது  மகன் உதயநிதி, கனிமொழி, திருமாவளவன் ஆகியோரை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட குறும்படம் சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவி வருகிறது.

குறும்படத்தில் பக்தர் ஒருவர் முதலில் விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகரை வழிபட செல்கிறார் அப்போது விநாயகர் தன்னை களிமண் என்றவர்களுக்கு வாக்கு அளித்துவிட்டு தற்போது என்னிடம் வருவதா என களிமண்ணை கொண்டே அடித்து அனுப்புவதும்.

பிறகு அதே பக்தர் முருகன் கோவிலுக்கு செல்லலாம் இன்று முருகன் கோவிலுக்கு சென்றால் கறுப்பர் கூட்டம் என்ற யூடூப் சேனல் ஒன்றில் முருகன் குறித்தும் கந்தசஷ்டி கவசம் குறித்தும் அருவருப்பாக பேசிய வீடியோ காட்சிகள் திரையில் தோன்றுகிறது. முருகன் குறித்து அவதூறாக பேசிய நபர்கள் ஆதரிக்கும் நபர்களுக்கு வாக்கு அளித்துவிட்டு இங்கு வருகிறாயா? என வேல் கொண்டே விரட்டி அடிக்கும் காட்சியும்

மேலும் கனிமொழி  பெருமாள் உண்டியலுக்கே பாதுகாப்பா? என கேள்வி எழுப்பியதும் , பேசிக்கா தலைவர் திருமாவளவன் போன்றவர்கள் இந்து மத கோயிலில் உள்ள சிலைகள் அசிங்கமாக உள்ளது  என்றதும்,  தற்போதைய முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது இந்து திருமண சடங்குகள் அவதூறாக விமர்சனம் செய்தது என ஒரே குறும்படத்தில் அனைத்து காட்சிகளையும் இடம்பெற செய்துள்ளனர்.

இந்த குறும்படம் இணையத்தில் எதிர்க்கட்சிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் வைரலாகி வருகிறது, பலரும் இந்தக் குறும்பட வீடியோவை சோசியல் மீடியாக்களில்  அதிக அளவில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.